
தெலுங்கர் இனம் இல்லையென்றால் தமிழகம் எப்படி வளரும் என்று நடிகர் ராதா ரவி கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
மறைந்த நடிகர் எம்ஆர் ராதாவின் 40-ஆம் ஆண்டு புகழாஞ்சலி நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ராதா ரவி,
"தமிழகத்தில் அமைச்சரவை அமைப்பதற்கு ஒரு பெரிய தூணாக இருப்பது தெலுங்கர் இனம். தெலுங்கர் இனம் இல்லையென்றால், அமைச்சரவை அமைக்க முடியாது. தெலுங்கர்கள் இல்லையென்றால் தமிழ்நாடு எப்படி வளரும்? திரையுலகமாகவே இருந்தாலும், அதில் அதிகமாக இருந்தவர்கள் தெலுங்கர்கள்தான். நான் இங்கு அரசியல் கருத்துகள் பேச வரவில்லை.
என்னுடைய இனம் தெலுங்கு இனம். நான் திராவிடத் தெலுங்கன். வாய்ப்புகள் பறிபோகும் என்ற பயத்தினாலேயே, சினிமாவில் தான் தெலுங்கன் என்று சொல்ல பயப்படுகிறார்கள்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.