ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் இன்று அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும்  திமுக வேட்பாளரை அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவிக்க உள்ளார்.

News image
திமுக தலைவர்  ஸ்டாலின்
Updated On :23 செப்டம்பர் 2019, 8:54 pm

DIN


விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும்  திமுக வேட்பாளரை அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவிக்க உள்ளார்.
விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
 விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிட உள்ளது. இதற்காக அறிவாலயத்தில் திங்கள்கிழமை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மு.க.ஸ்டாலினின் மகனும், இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டியில் போட்டியிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி விருப்ப மனு அளித்தார்.
விழுப்புரம் மாவட்டப் பொருளாளர் புகழேந்தி, மாவட்ட இலக்கிய அணித் தலைவர் ராஜாராமன், விழுப்புரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெயரவிதுரை உள்பட ஏராளமானோர் மனு அளித்தனர்.
இன்று நேர்காணல்: திமுக வேட்பாளர் நேர்காணல்  அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை (செப். 24) நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கான வேட்பாளரை மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.