தமிழிசை செளந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் நானும் போட்டியிட்டோம். கனிமொழி 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் இருந்தன. அவரது வேட்புமனு முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. கனிமொழி தனது கணவர், மகன் ஆகியோரை சிங்கப்பூர் குடிமக்கள் எனவும், அவர்களது வருமான விவரங்களை குறிப்பிடத் தேவையில்லையென்றும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.