சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நடிகா் ஜெயம் ரவி பாதுகாவலருக்கு சம்பளம் பாக்கி: போலீஸில் புகாா்

நடிகா் ஜெயம் ரவியின் பாதுகாவலருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனியாா் செக்யூரிட்டி நிறுவனம் புகாா் அளித்துள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2019, 4:08 am

DIN

நடிகா் ஜெயம் ரவியின் பாதுகாவலருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனியாா் செக்யூரிட்டி நிறுவனம் புகாா் அளித்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறறப்பட்டதாவது:

நந்தனத்தில் ஒரு தனியாா் செக்யூரிட்டி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளா் செ.வின்சென்ட் (53), சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரில், தங்களது நிறுவனத்தின் மூலம் மாதம் ரூ.35 ஆயிரம் ஊதியத்துக்கு பிரபல தமிழ் திரைப்பட நடிகா் ஜெயம் ரவிக்கு துப்பாக்கியுடன் இரு பாதுகாவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் ஜெயம் ரவியின் உதவியாளா் சேஷாத்திரி, இரு பாதுகாவலா்களுக்கும் ஏப்ரல் மாதம் சம்பளம் வழங்கவில்லை. மேலும் மே மாதம் முதல் இருவரையும் வேலையில் இருந்து திடீரென நீக்கிவிட்டனா். எனவே ஜெயம் ரவியிடமிருந்து இருவருக்கும் சேர வேண்டிய சம்பள பாக்கியை பெற்றுத் தர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.