சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் பெயர்ப் பலகை வைக்கும் பணி தொடங்கியது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முகப்புப் பகுதியில் "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' என்று பெயர் பலகை வைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் பெயர்ப் பலகை வைக்கும் பணி தொடங்கியது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முகப்புப் பகுதியில் "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' என்று பெயர் பலகை வைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
 மேலும், ஒவ்வொரு நடைமேடைகளின் முன்பகுதியிலும், "எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' என்னும் பெயர் அடங்கிய சிறிய அளவிலான ஸ்டிக்கர் பொருத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 தமிழகத்தில் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாகவும், சென்னையில் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகவும் சென்ட்ரல் ரயில் நிலையம் விளங்குகிறது. இந்த ரயில் நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று அதிமுக தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
 இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி கடந்த மாதம் 6-ஆம் தேதி சென்னை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.
 இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் மூலமாக தெரிவித்தது. தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' என்று பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இதுபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் பலகை வைப்பதற்கான பணியை மேற்கொள்ள ரயில்வே உத்தரவிடப்பட்டது. இதற்கான பெயர் பலகை மாதிரியும் வெளியிடப்பட்டது.
 இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்பகுதியில் பெயர் பலகை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இதுபோல, ரயில் நிலையத்தின் உள்ளே ஒவ்வொரு நடைமேடைகளின் முன்பகுதியில் "எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' என்னும் பெயரில் சிறிய அளவில் ஸ்டிக்கரில் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது:
 நிலையத்தின் முன்பகுதியில் பெரிய அளவில் தமிழ், ஆங்கிலம், இந்தியில் பெயர் பலகைகளும், நிலையம் முழுவதும், நுழைவு வாயில்கள், நிலைய உட்புற, வெளிப்புற சுவர்கள், நடைமேடைகளில் ஒட்டுவதற்கு ஏதுவாக, மூன்று மொழிகளில் பல அளவுகளில் ஸ்டிக்கர்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பெயர் பலகை மற்றும் ஸ்டிக்கர்கள் ஓரிரு நாளில் முழுமையாக பொருத்தப்பட உள்ளன' என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com