சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்அன்பில் மகேஸ் ஜாமீன் மனு! நவ. 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!ஆந்திரத்தில் கரை ஒதுங்கிய 9 தமிழக மீனவர்களின் உடல்கள்!நெருங்கும் தீபாவளி! புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்களும் நிலையங்களும்காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடுராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!ஜெயிலர் - 2 ஓடிடியில் நவ. 12-இல் வெளியாகிறது!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

காலமானார்: பட்டிமன்ற பேச்சாளர் தா.கு. சுப்பிரமணியன்

மதுரையைச் சேர்ந்த ஆன்மிகச் சொற்பொழிவாளரும், பட்டிமன்றப் பேச்சாளருமாகிய தா.கு. சுப்பிரமணியன் (72) சனிக்கிழமை இரவு காலமானார். 

Updated On :

மதுரையைச் சேர்ந்த ஆன்மிகச் சொற்பொழிவாளரும், பட்டிமன்றப் பேச்சாளருமாகிய தா.கு. சுப்பிரமணியன் (72) சனிக்கிழமை இரவு காலமானார். 

அவருக்கு மனைவி ஜமுனா, மகன் பல் மருத்துவர் வெங்கட்ரமணன் ஆகியோர் உள்ளனர். மதுரைக் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், நடன கோபாலநாயகி சுவாமிகள் இயற்றிய சௌராஷ்டிர மொழி கீர்த்தனைகள் குறித்து ஆய்வு செய்து, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பணியின்போதும், பணி ஓய்வுக்குப் பிறகும் பல்வேறு பட்டிமன்றங்களில் பங்கேற்றுள்ளார். இவருக்கு, தமிழக அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இறுதிச் சடங்குகள், மதுரை, தவிட்டுச்சந்தை பகுதியில் உள்ள அழகர்சாமி நாயுடு சந்தில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.  இதைத்தொடர்ந்து தத்தனேரி மயானத்தில் தகனம் நடைபெறும். தொடர்புக்கு - 90806-25425.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.