மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜூன் 2019, 7:24 am


சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் 92 தரமற்ற பொறியியல் கல்லூரிகளில் பட்டியலை வெளியிட்டால்தான் அதில் சேராமல் மாணவர்கள் தற்காத்துக் கொள்ள முடியும். 

ஆனால்,  தரமற்ற கல்லூரிகளிடம் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு தரமற்ற 92 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட மறுப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் பதிவாளர் குமார் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.