வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை : ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை எட்டியது

தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.  முன்னெப்போதும் இல்லாத வகையில் புதன்கிழமை காலை ரூ.30 ஆயிரத்தை கடந்த தங்கத்தின் விலை மாலையில் சற்று குறைந்து
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை : ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை எட்டியது


தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.  முன்னெப்போதும் இல்லாத வகையில் புதன்கிழமை காலை ரூ.30 ஆயிரத்தை கடந்த தங்கத்தின் விலை மாலையில் சற்று குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3,741க்கும், பவுன் ரூ.29,928- க்கும் விற்பனையானது.
சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏறுமுகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமன்றி, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி கடுமையாக உயர்த்தப்பட்டதும் அதன் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 
இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாகக் காணப்படும் வர்த்தக சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. சீனாவில் 27 ஆண்டுகளில் இல்லாத வர்த்தக மந்தநிலை நீடிக்கிறது. ஐரோப்பிய நாடுகளிலும் இதுபோன்ற வர்த்தக சுணக்கம் பெரிய அளவில் இருக்கிறது. 
இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்குப் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதனால்  தங்கத்தின் மீதான முதலீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த காரணங்களால் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. 
சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை 22 காரட்  ஒரு கிராம் தங்கம் ரூ.3,729-க்கும்,  ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 832-க்கும் விற்பனையானது.  இந்தநிலையில் புதன்கிழமை  தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. காலை நேர நிலவரப்படி   22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,765- க்கும், பவுன்  ரூ.288 உயர்ந்து ரூ.30,120-க்கும் விற்பனையானது.  இதையடுத்து மாலையில் சற்று குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3,741-க்கும் பவுன்  ரூ.29,928- க்கும் விற்பனையானது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.60 காசுகள் உயர்ந்து ரூ.55.20க்கு விற்பனையாகிறது.
முன்னதாக, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பவுன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையானது. ஜூன் மாதம் ரூ.26 ஆயிரத்தை தாண்டியது. ஆகஸ்ட் மாதம் ரூ.27 ஆயிரம், ரூ.28 ஆயிரம், ரூ.29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,741
1 பவுன்  தங்கம்    29,928
1 கிராம் வெள்ளி    54.80
1 கிலோ வெள்ளி    54,800 
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்    3,729
1 பவுன்  தங்கம்    29,823
1 கிராம் வெள்ளி    52.60
1 கிலோ வெள்ளி    52,600
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com