கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ.3 ஆயிரம் கோடி: பிரதமரிடம் காணொலியில் முதல்வர் வேண்டுகோள்

முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவை வாங்க ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். 

News image
முதல்வர் பழனிசாமி
Updated On :2 ஏப்ரல் 2020, 1:08 pm

DIN

முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவை வாங்க ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். 

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், மத்திய பாதுகபாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். 

மேலும் தமிழகம் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனையில் பங்கேற்றார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரும் பங்கேற்றனர். 

அப்போது, முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவை வாங்க ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் கோரிக்கை வைத்தார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையன நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். கரோனா பரிசோதனை உபகரணங்களை கூடுதலாக வழங்க வேண்டும். 2019-20 ஆண்டு டிசம்பர்-ஜனவரிக்கான ஜிஎஸ்டி நிதியை உடனே விடுக்க வேண்டும். 

2020-21 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்களை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இதேபோன்று கரோனா தடுப்புப் பணிகளுக்கு தமிழகம் கோரிய ரூ.9000 கோடியை ஒதுக்க வேண்டும் எனவும் முதல்வர் அப்போது கேட்டுக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.