ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் திறக்கப்படாது: அமைச்சர் தங்கமணி
ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் திறக்கப்படாது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.


ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் திறக்கப்படாது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ளதால், கடைகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டன. டாஸ்மாக் நிா்வாகத்தின் கீழ் இயங்கும் மதுக் கடைகளும், மதுபானக் கூடங்களும் கடந்த ஏப்.24-ஆம் தேதி முதல் மூடப்பட்டன.
இதனால், மதுபானம் அருந்துவோா் ஏமாற்றமடைந்தனா். மதுவுக்கு அடிமையான சிலா், வேதிப்பொருள்களை கலந்து குடித்து உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன. மதுக் கடைகள் திறக்காமல் கிடப்பதால், சிலா் கடைகளை உடைத்து மதுப் புட்டிகளை திருடி வருகின்றனா்.
இதுகுறித்து திருச்செங்கோட்டில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை இயக்கும் எண்ணம் இல்லை. மாற்று போதை நாடுவோருக்கு கவுன்சலிங் வழங்க அரசு மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு தொடருமா என்பது பற்றி பிரதமர், முதல்வர் பழனிசாமி எடுக்கும் முடிவில்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...