நோய்த் தொற்றினை கண்டறிதல், அவர்களை தனிமைப்படுத்துதல், பரிசோதனைக்கு உட்படுத்துதல், நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தல், நோய்த் தொற்று பரவாதிருக்க ஊரடங்கு உத்தரவு, ஊரடங்கு உத்தரவினை முழுமையாக கண்காணிக்க காவல் துறையினர் இரவு பகல் பாராது பணி செய்து வருதல், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து உறுதி செய்ய சிறப்பு நிவாரணம், ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணம், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவுப் பாதுகாப்பு, வேளாண் பெருமக்களுக்கு கட்டண சலுகைகள் என பன்முக நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. நிலைமை இவ்வாறிருக்கும் போது, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள், இரவு பகல் பாராது, தன்னலமற்று பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி அமைப்பினர், தூய்மைப் பணியாளர்கள் போன்ற பணியாளர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.