தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா: தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைவு
தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அதிலும் குறிப்பாக, இந்தியாவில் தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இதனால் நோய் தொற்றைக் கட்டுப்படுத்தவேண்டிய இக்கட்டான சூழலில் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் கடந்த மூன்று நாள்காக கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவது சற்று ஆறுதலை தருகிறது. இதன்படி நேற்று முன்தினம் 31 பேரும், நேற்று 38 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அந்த பாதிப்பு எண்ணிக்கை 25ஆக குறைந்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1, 267 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோரின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14-இல் இருந்து 15 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவர்கள் 6 பேர், தனியார் மருத்துவர்கள் 5 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாள்களில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...