/

விழுப்புரத்தில் கரோனா பாதிப்பில் இருவர் பலியானதால் அச்சம்

விழுப்புரம் மாவட்டத்தில் கோரண தோற்று எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :16 ஏப்ரல் 2020, 1:54 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கோரண தோற்று எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே தில்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், வியாழக்கிழமை விழுப்புரத்தை சேர்ந்த மேலும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். 

விழுப்புரம் கே கே ரோடு பகுதியில் நடைபெற்ற  இறுதிச் சடங்கில் பங்கேற்றதால் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் முதியவர் குடியிருப்புப்பகுதி பகுதியான பானாம்பட்டு பகுதிக்கு சீல் வைத்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுவரை சுகாதார துறையினரின் கண்காணிப்பில் வராத நிலையில் முதியவர் ஒருவர் திடீரென கொரானாவால் உயிரிழந்துள்ளதால், விழுப்புரம் மாவட்டத்தில் கரோணா பரவல் அதிகரித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் முக கவசம் இன்றி வெளியே வரவேண்டாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.