கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவம்: கலால்துறை ஆணையர் நோட்டீஸ்
கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கலால்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கலால்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சந்திரகாசு (55), ராமா் மகன் எழில்வாணன் (35), ஆறுமுகம் மகன் மாயகிருஷ்ணன் (50), மாயவன் மகன் ரவி (40), ஆணையம்பேட்டையைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சுந்தர்ராஜன் (40). இவா்கள் அனைவரும் கூலித் தொழிலாளா்கள். இவா்கள் 5 பேரும் ஆலப்பாக்கத்தில் திங்கள்கிழமை இரவு மது போதைக்காக, ஒரு லிட்டர் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட இவா்கள் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இருப்பினும், சந்திரகாசு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், மெத்தனால் குடித்த மாயகிருஷ்ணன், சுந்தர்ராஜன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தனர்.
இதையடுத்து மது போதைக்காக மெத்தனால் குடித்த பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கடலூர் சிப்காட்டில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலைக்கு கலால்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...