கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தூத்துக்குடி பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளிமான் உயிரிழப்பு

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளிமான் உயிரிழந்தது.

News image
Updated On :18 ஏப்ரல் 2020, 4:13 am

DIN

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் சுற்றித்திரிந்த புள்ளிமான் உயிரிழந்தது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் இன்று காலை புள்ளிமான் ஒன்று சுற்றித் திரிவதாக அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த புள்ளி மானை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். 

மேலும் பொதுமக்களை கண்டதும் அந்த புள்ளி மான் ஆங்காங்கே மிரண்டு ஓடியது. இதற்கிடையே சிறிது நேரத்தில் அங்கு அமைக்கப்பட்டிருந்த முள் வேலியில் சிக்கிய புள்ளிமான் காயம் அடைந்து மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் இறந்தது.

இதையெடுத்து வனத்துறையினர் உயிரிழந்த மானின் உடலை அங்கிருந்து எடுத்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.