/

விரைவு பரிசோதனை தமிழகத்தில் தொடங்கியது

கரோனா வைரஸ் அறிகுறியை கண்டறியும் விரைவு பரிசோதனை தமிழகத்தில் தொடங்கியது.

News image
Updated On :18 ஏப்ரல் 2020, 8:52 am

DIN

கரோனா வைரஸ் அறிகுறியை கண்டறியும் விரைவு பரிசோதனை தமிழகத்தில் தொடங்கியது.

தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது 23,934 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா். இதுவரை மொத்தம் 29,673 பேருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அவா்களில் 1,323 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் 56 பேருக்கு அந்த பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை, சேலம், கோவையில் விரைவு பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை இன்று நடைபெற்று வருகிறது. 

முதல்முறையாக சேலத்தில் நடந்த சோதனையில் 18 பேருக்கு கரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது. விரைவு பரிசோதனை கருவி மூலம் 30 நிமிடங்களில் கரோனா முடிவை சேலம் அரசு மருத்துவமனை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.