தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கரோனாவை அழிக்கக்கோரி சூரிய பகவானிடம் மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் வேண்டல்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியக் குழந்தைகள், கரோனாவை அழிக்கக் கோரி, சூரிய பகவானிடம் கற்பூர தீபம் ஏற்றி ஞாயிற்றுக்கிழமை வேண்டினர். 

News image
Updated On :19 ஏப்ரல் 2020, 10:04 am

DIN

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியக் குழந்தைகள், கரோனாவை அழிக்கக் கோரி, சூரிய பகவானிடம் கற்பூர தீபம் ஏற்றி ஞாயிற்றுக்கிழமை வேண்டினர். 

சீனாவில் தொடங்கப்பட்ட கரோனா தொற்று நோய், அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்த், குவைத், துபாய், மலேசியா, இந்தியா உள்ளிட்ட உலகத்தின் அனைத்து நாடுகளிலும் தடம் பதித்த கரோனா, இத்தாலி பிரதமர், இங்கிலாந்த் இளவரசர் உள்ளிட்ட அனைத்து மக்களையும் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. கரோனா தொற்று நோயால் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். 

இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாத கரோனா தொற்று நோய், விமானம் பறக்காத நிலையிலும் உலகமெங்கும் பரவியுள்ளது. இறைவனை வேண்டலாம் என்றாலும், கோயில்களும், மசூதிகளும், ஆலயங்களும் மூடப்பட்டு விட்டன. அவரவர்கள் இருப்பிடத்திலேயே இறைவனை இறைஞ்சுகிறார்கள். இந் நிலையில், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பனங்காட்டாங்குடி மற்றும் குடிதாங்கிச்சேரி உள்ளிட்ட இரண்டு இடங்களில், அரசின் அங்கீகாரம் பெற்று, மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கான, மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோருக்கான பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. 

இப்பள்ளியின், நிறுவனர் ப.முருகையன் ஏற்பாட்டின் படி, குடிதாங்கிச்சேரியில் உள்ள 14 வயதுக்கு மேற்பட்ட மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுடன், ஒரு மீட்டர் இடைவெளி விட்டு, வட்ட வடிவத்தில் நின்றனர். வானத்தைப் பார்த்து, சூரிய பகவானிடம் கொடூரமான கரோனா தொற்று நோயில் இருந்து, தமிழக, இந்திய, உலக மக்களை காப்பாற்றும் படி,  ெவளியில் உலா வரும் இறைவனான சூரிய பகவானுக்கு கற்பூர தீபம் ஏற்றி வேண்டினார்கள். 

அப்போது, மன வளர்ச்சிக்  குன்றிய குழந்தைகள், ( உனது ) சூரிய வெப்பத்தால், கரோனாவை அழித்து உலக மக்களை காப்பாற்று என சூரிய பகவானிடம் வேண்டினர்.நிகழ்ச்சியில், பயிற்சியாளர்கள் ராஜா, கிரிஜா, மேலாளர் தினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.