சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி
சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
53 வயது உதவி ஆய்வாளரான அவர் பாரிமுனை பகுதியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாளுக்கு முன் அவருக்கு சளி, இருமல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கரோனா நோய்த்தொற்றுக்குள்ளான உதவி ஆய்வாளருடன் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் உள்பட 30 காவலர்கள் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...