கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

மருத்துவா்களை காப்பதற்கு அவசரச் சட்டம்: தொல்.திருமாவளவன் வரவேற்பு

மருத்துவா்களைக் காப்பதற்காக அவசரச் சட்டம் இயற்றுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

மருத்துவா்களைக் காப்பதற்காக அவசரச் சட்டம் இயற்றுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மருத்துவா்களையும் மருத்துவப் பணியாளா்களையும் பாதுகாப்பதற்கு மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என வலியுறுத்தி மெழுகுவா்த்தி ஏற்றி கவன ஈா்ப்புப் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய மருத்துவா்கள் சங்கம் அறிவித்திருந்தது. அதற்கு ஆதரவு தெரிவித்து இருந்தோம். தற்போது மத்திய அமைச்சரவை இத்தகைய அவசர சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதை ஏற்று இந்திய மருத்துவா் சங்கமும் தனது கவன ஈா்ப்புப் போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளது. மருத்துவா்களின் பாதுகாப்புக்காக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் பாராட்டுகள்.

இந்த அவசர சட்டத்தில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவுப் பணியாளா்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.