சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கரோனா பேரிடர் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கோடு

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 10:24 am

DIN

திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கரோனா பேரிடர் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கோடு தி.மு.க. சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம் குறித்து காணொலிக் காட்சி மூலம் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள, பொதுமக்களுக்கான உதவி எண்ணான "90730 90730" என்ற அலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு  பொதுமக்கள் தெரிவித்த குறைகள் மற்றும் பிரச்னைகளுக்கு எட்டப்பட்ட தீர்வுகள் குறித்து, சென்னை மற்றும் ஈரோடு வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக் குழுத் தலைவர்கள் ஆகியோரைக் காணொலிக் காட்சி மூலமாகத் தொடர்புகொண்டு விசாரித்தறிந்தார்.

‘ஒருங்கிணைவோம் வா!’ திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்தப் பாடுபடும் கழக முன்னணியினர் மற்றும் நிர்வாகிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த கழகத் தலைவர் அவர்கள் - அப்பணி மேலும் செம்மையாக நடைபெற தமது ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.