கடலூர் மாவட்டத்தில் கிராமப்புற மருந்து கடைகளுக்கு அனுமதி அட்டை வழங்க கோரிக்கை
கடலூர் மாவட்டத்தில் நகரம், ஊரக மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள மருந்து கடைகளுக்கும்,


கடலூர் மாவட்டத்தில் நகரம், ஊரக மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள மருந்து கடைகளுக்கும், மொத்த மருந்து வணிகர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா வைரஸ் நோய் பரவுவதலை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நடைமுறை படுத்தி வருகிறது. இந்நிலையில் மருந்து கடைகள் திறக்கலாம் என அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சில்லரை மருந்து வணிகர்கள் மொத்தம் 900 பேர் உள்ளனர். கிராமப்புற மருந்து கடைகள் மொத்தம் 400 உள்ளன. மொத்த மருந்து விற்பனையாளர்கள் 69 பேர் உள்ளனர். இந்நிலையில் கடலூர் மற்றும் சிதம்பரத்தில் உள்ள மருந்து கடைகள் உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் புகைப்படத்துடன் அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் கிராமப்புற பகுதிகளில் உள்ள மருந்து கடைகள் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்படாததால், கடைகளை திறப்பதில்லை. இதனால் கிராமப்புற மக்கள் மருந்துகள் வாங்க நகரத்தை நோக்கி வர வேண்டிய சூழல் உள்ளது. நகரத்தை நோக்கி வரும் போது காவல்துறையினர் அவர்களை அனுமதிப்பதில்லை.
இதனால் மருந்துகள் வாங்க வரும் கிராமப்புற மக்கள் பல்வேறு இன்னல்களை மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே ஊரக மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மருந்து வணிகர்கள், விற்பனையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி அட்டைகளை வழங்க கடலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலாளர் சி.டி.அப்பாவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...