கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதி
கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஈரோடு இளைஞர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஈரோடு இளைஞர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று காரணமாக 70 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 64 பேரும், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் 4 பேரும், திருச்சி அரசு மருத்துவமனையில் ஒரு இளைஞரும் சிகிச்சை பெற்றனர். இதில் இன்று வரை 65 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். ஒருவர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய இளைஞருக்கு கடந்த 2 நாட்களாக சளி தொல்லை இருந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து நேற்று சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த இளைஞருக்கு தீவிர பரிசோதனை நடைபெற்று வருகின்றது.
ரத்த மாதிரிகளை சேகரித்துள்ள மருத்துவர்கள், சாதாரண சளியா அல்லது மீண்டும் கரோனா பாதிப்பு ஏதாவது ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது, 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பு முடிவடைந்த நிலையில் மீண்டும் ஏதாவது பாதிப்பு உள்ளதா என்பது குறித்த பரிசோதனைக்காக இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைகள் முடிவடைந்ததும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றனர்.
தச்சு தொழிலாளி குடும்பத்துடன் மருத்துவமனையில் அனுமதி:
சென்னிமலை முகாசிபிடாரியூரை சேர்ந்த தச்சு தொழிலாளி ஒருவர் மதுரையில் தங்கி பணியாற்றி வந்தார். ஊரடங்கு காரணமாக அண்மையில் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அடுத்தடுத்து காய்ச்சல் வந்ததையடுத்து, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சந்தேகத்தின் பேரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...