குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஊரடங்கால் ரமலான் நோன்பு தொழுகையையும் வீட்டிலேயே நடத்தும் இஸ்லாமியர்கள்

கரோனா தொற்று நோயால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், ரமலான் நோன்பு தொழுகையையும் வீட்டிலேயே இஸ்லாமியர்கள் நடத்துகிறார்கள்.

News image
Updated On :26 ஏப்ரல் 2020, 12:27 pm

DIN

கரோனா தொற்று நோயால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், ரமலான் நோன்பு தொழுகையையும் வீட்டிலேயே இஸ்லாமியர்கள் நடத்துகிறார்கள்.

இது குறித்து, கூத்தாநல்லூர் பெரியப் பள்ளிவாயில் மதரஸா பைசல் பாக்கியா இஸ்லாமியக் கல்லூரி முதல்வர் T.M. ஜாஹீர் உசேன் கூறியது. திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் 12 ஆம் நூற்றாண்டு முதல் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு சரித்திரச் சான்றுகள் உள்ளன. இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த ரமலான் நோன்புக்கான ரமலான் நோன்பு தொடங்கப்பட்டு விட்டது. 

காலை 6 மணி முதல், மாலை சூரியன் மறையும் வரை, முஸ்லீம்கள் உண்ணாமலும், உறங்காமலும் இருப்பதற்குத்தான் நோன்பு எனப் பெயர். நோன்பு காலத்தில், பள்ளி வாயில்களில் செல்வந்தர்களால் வழங்கப்படும் உதவியால், கஞ்சி காய்ச்சப்படும். பள்ளி வாயில்களில் காய்ச்சப்படும் கஞ்சியை, ஏழை, எளியவர்களுக்கும், உறவினர்களுக்கும், மற்ற சமூகத்தினருக்கும் வழங்கப்படும். கரோனா தொற்று நோயால் 144 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 5 நேரத் தொழுகையையும் பள்ளிவாயில்களில் நடத்துவதில்லை. 

பள்ளி வாயிலில்  இருந்து பாங்க் எனச் சொல்லக் கூடிய தொழுகைக்கான அழைப்பு ஒலி மட்டும் ஒலிக்கப்படும். தொழுகையை அவரவர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகையை நடத்தி வருகிறார்கள். அழைப்பு ஒலியிலும், வீட்டிலேயே தொழுகை செய்யுங்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. ரமலான் நோன்பு காலத்தில் இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை தொழுகையில் ஈடுபடுவார்கள். இந்தத் தொழுகையையும் பள்ளிவாயிலில் நடத்தப்படுவதில்லை. அரசின் சட்டங்களை மீறக்கூடாது என்பதற்காகவும், கரோனா தொற்று நோய் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும், சமூகத்தை பாதுக்காக்க வேண்டும் என்பதற்காகவும் தொழுகையை வீட்டிலேயே நடத்துகிறார்கள். 

நோன்பு காலங்களில் எல்லா பள்ளி வாயில்களிலும் ஆண்கள் தொழுகை நடத்துவார்கள். கூத்தாந்நல்லூர் ஜாவியாத் தெருவில் உள்ள மஸ்ஜித்யா பள்ளிவாயிலில் மட்டுமே, பெண்கள் அனைவரும் திரண்டு வந்து ெதாழுகை நடத்துவார்கள்.144 தடை உத்தரவால், பெண்களையும் பள்ளி வாசலுக்கு வரவேண்டாம் என மறுக்கப்பட்டு விட்டது. ரமலான் நோன்பு காலமான இந்த நேரத்தில் மட்டும், பள்ளி வாயிலில் நோன்புக் கஞ்சி காய்ச்சி, நோன்பு இருக்கக் கூடியவர்களுக்கும், ஏழைகளுக்கும் கொடுப்பதற்கு அரசு உத்தரவிட்டால் மகிழ்ச்சியாக இருக்கும். முக்கியமாக, நோன்பு கஞ்சியை யாரும் அங்கேயே சாப்பிட மாட்டார்கள். வீட்டுக்குத் தான் எடுத்துச் சென்று விடுவார்கள். மேலும், பள்ளி வாயில்களில் பணிபுரியும், உலமாக்களுக்கு, உலமாக்கள் நலவாரிய அட்டை வைத்திருக்கும் உலமாக்களுக்கு, நோன்பு காலத்தில், அரசு கூடுதலான உதவி செய்ய வேண்டும் என்றார்.

Story image

இதே போல்,பொதக்குடி உறவின் முறை ஜமாஅத் செயலாளர் ரஃப்யூதீன் கூறியது. நோன்பு காலத்தில் தமிழக அரசு வழங்கும் அரிசிக்கு, சில ஆண்டுகளாக முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருந்தது. தற்போது, அரசு வழங்கும் அரிசியை தேவையானவர்களுக்கு, ஏழை ,எளியவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவால் எந்தப் பள்ளிவாயில்களிலும் கஞ்சி காய்ச்சப்படுவதில்லை. சில கடைகளில் ஆர்டரின் பேரில் கஞ்சி காய்ச்சி விற்பனை செய்யப்படுகிறது. இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் அதிகம் தர்மம் செய்யப்படுவது வழக்கம். தற்போது, 144 தடையால் கொடுக்க முடியவில்லை. வெளியூரிலிருந்து வருபவர்கள் வருவதில்லை. உள்ளுரிலேயே உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.