கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

17ஆம் தேதி முதல் மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாயில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

பாசனத்திற்காக மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாயில் 17ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  

News image
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Updated On :14 ஆகஸ்ட் 2020, 11:34 am

DIN

பாசனத்திற்காக மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாயில் 17ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனப் பகுதியில் உள்ள நிலங்களுக்கு பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு வேண்டுகோள் வந்துள்ளன. 
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையின் கிழக்குக்கரை கால்வாய் பாசனப் பகுதியில் 27,000 ஏக்கர் நிலங்களும், மேற்குக் கரை கால்வாய் பாசனப் பகுதியில் 18,000 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு மேட்டூர் அணையிலிருந்து 17.8.2020 முதல் 31.12.2020 வரை தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.