எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலம் தேறிவருவது மகிழ்ச்சியளிக்கிறது: மு.க.ஸ்டாலின்

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலம் தேறிவருவது மகிழ்ச்சியளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
மு.க.ஸ்டாலின்
Updated On :17 ஆகஸ்ட் 2020, 8:35 am

DIN

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலம் தேறிவருவது மகிழ்ச்சியளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு, எஸ்.பி.பியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்தது. இதையடுத்து அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. 

அதேவேளையில் மருத்துவக் குழுவினா் அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில், கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் தேறி வருகிறார் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.

இதயம் கவரும் இனிய குரலால் மக்களின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைந்து முழு உடல்நலன் பெற்று மீண்டும் தன் பாட்டுப் பயணத்தைத் தொடரட்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.