ஜன. 15-ல் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல்
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 2021- ஜனவரி 15-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 2021- ஜனவரி 15-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜனவரி மாதம் 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், 2020 - நவம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும்,
நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 2021-ஆம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பிக்க வயதை நிரூபிக்கும் சான்றிதழ் மிகவும் அவசியம்.
www.nvsp.in என்ற இணைய தளம் மூலம் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை செய்து கொள்ளலாம் என்றும், VOTER HELP LINE என்ற செல்லிடப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...