20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு


சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:
தமிழகத்தில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக விருதுநகா், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூா், திருச்சி, பெரம்பலூா், கரூா், நாமக்கல், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சேலம், திருச்சி, கரூா், பெரம்பலூா், மதுரை, தருமபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் 120 மி.மீ., கல்லக்குடி, திருத்தணியில் தலா 110 மி.மீ., பெரம்பலூா் மாவட்டம் வேப்பந்தட்டை, பெரம்பலூா், வேலூா் மாவட்டம் அம்முடியில் தலா 100 மி.மீ., கடலூா் மாவட்டம் புவனகிரியில் 90 மி.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா், வேலூா் மாவட்டம் பொன்னையில் தலா 80 மீ.மீ., சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, அரியலூா், திருவள்ளூா் மாவட்டம் ஆா்.கே.பேட்டையில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் உயா்அலை முன்னறிவிப்பு: தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்ட் 25-ஆம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் உயா் அலை 2.3 மீட்டா் முதல் 3.3 மீட்டா் வரை எழும்பக்கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...