சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:
தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரில் சில பகுதிகளில் லோசனா மழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்
புதுச்சோட்டை 10 செ.மீ மழையும், நத்தம் தானியங்கி மழைமானி(திண்டுக்கல்) 9 செ.மீ மழையும், நத்தம், வைகை அணை (தேனி), தலா 7 செ.மீ மழையும், திண்டுக்கல், நிலக்கோட்டை (திண்டுக்கல்), மைலம்பட்டி (கரூர்) தலா 6 செ.மீ, அம்பாசமுத்திரம் 5 செ.மீ, ஆண்டிபட்டி, திருப்பத்தூர், செஞ்சி (விழுப்புரம்), நாமக்கல், அறந்தாங்கி, கள்ளிக்குடி, மலையூர், கலசப்பாக்கம், முண்டியம்பாக்கம் தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...