சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில், தருமபுரி, மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில், ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 10:56 pm

DIN

சென்னை: தமிழகத்தில், தருமபுரி, மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில், ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அம்மையம், சனிக்கிழமை, வெளியிட்ட செய்திக்குறிப்பு: வளி மண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில், ஞாயிற்றுக்கிழமை (ஆக.30), தருமபுரி, மதுரை, திண்டுக்கல், விருதுநகா், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், சேலம், திருச்சி, மதுரை, நாமக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 97 டிகிரி, குறைந்தபட்சமாக 81 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகக் கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வடக்கு மகாராஷ்டிர கடலோரப் பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமையும், வடகிழக்கு அரபிக் கடல் மற்றும் குஜராத் கடலோர பகுதிகளில், ஆக.30,31, ஆகிய நாள்களிலும், தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில், ஆக.30,31, செப்.1,2 ஆகிய நாள்களிலும், 45 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்தில், பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

மழை அளவு:   தமிழகத்தில், சனிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 50 மி.மீ,

மதுரை விமான நிலையம், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் தலா 30 மி.மீ மழை பதிவானது.

ஈரோட்டில் 102 டிகிரி: தமிழகத்தில், சனிக்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ஈரோட்டில் 102 டிகிரி, மதுரை மற்றும் திருச்சியில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.