திருச்சி அருகே புதுப்பெண் கற்பழித்து கொலை; 7 பவுன் நகை கொள்ளை
திருச்சி அருகே இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்ற புதுபெண்ணை கற்பழித்து மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். மேலும் 7 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.


திருச்சி அருகே இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்ற புதுபெண்ணை கற்பழித்து மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். மேலும் 7 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருச்சி கொள்ளிடம் வாழவந்தான் புரம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ்(30). இவரது மனைவி கிறிஸ்டி கெலன் ராணி(26). இருவருக்குமிடையே திருமணமாகி ஒன்றரை மாதம் ஆகிறது .இன்று அதிகாலை 3:30 அளவில் இயற்கை உபாதை கழிக்க அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதிக்குச் சென்றுள்ளார் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் கண்டு அவரது வீட்டார் தேடிச் சென்றனர். அப்போது அங்குள்ள ஆற்றங்கரையோரத்தில் சடலமாக கற்பழிக்கப்பட்டு கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த தாலி மோதிரம் என 7 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் .
இதுகுறித்து கொள்ளிடம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்து சென்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...