தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மணப்பாறை அருகே பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மணப்பாறை அருகே பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.  

News image
மணப்பாறை அருகே பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.  
Updated On :31 ஆகஸ்ட் 2020, 1:43 pm

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அரசுக்கு அளிக்கப்பட்ட மனு மீது 6 மாதங்களாக எந்தவித நடவடிக்கையும் இல்லை எனப் புகார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செக்கணம் கிராமம் கருங்குளத்தில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் பட்டியல் இன மக்களுக்கென ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பஞ்சமி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து பயன்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவற்றை பட்டியல் இன மக்களுக்கு தர மறுப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்தப்பகுதி மக்கள் சார்பில் பஞ்சமி நிலத்தை மீட்டுத் தரக் கோரி அரசுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது உள்ள குடியிருப்பு பாறைகள் சார்ந்த இடமாக இருப்பதால் புதிய கட்டடங்கள் கட்டுவதிலும், கழிவறைகள் அமைப்பதிலும் சிரமம் இருப்பதாகவும், கழிவறைகள் இல்லாததால், அப்பகுதியில் வசித்து வரும் பெண்கள், வளரிளம் பெண்கள், இயற்கை உபாதைகளுக்கு 2 மைல் தூரம் நடந்து திறந்தவெளிக்கு பகுதியில் சென்று வருவதாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து கடந்த 6 மாதங்களாக அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் இல்லை என புகார் முன் வைக்கும் அப்பகுதி பட்டியல் இன மக்கள், இன்று அப்பகுதியில் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து, கைகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பஞ்சமி நிலத்தை மீட்டு தர கோரி முழக்கங்களை எழுப்பினர்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் வருகின்ற வெள்ளிக்கிழமை இதுகுறித்து இருத்தரப்பு சமரச கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததையடுத்து அப்பகுதி மக்கள் போரட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.