தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுச்சேரி துறைமுகத்தில் 3-ஆம் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம் 

புதுச்சேரி துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

News image

புதுச்சேரி துறைமுகத்தில் 3-ஆம் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

Updated On :1 டிசம்பர் 2020, 7:06 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரி துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கையின் திரிகோணமலைக்கு 600 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு 900 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறவுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை 3- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

 திடீர் காற்றுடன் மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதை குறிக்கும் இந்த புயல் எச்சரிக்கை கூண்டு உள்ளூர் முன்னறிவிப்பாக ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.