இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பேரவைத் தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும்: மு.க.அழகிரி

தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

News image
தமிழக பேரவைத் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும்: மு.க. அழகிரி
Updated On :1 டிசம்பர் 2020, 7:03 am

DIN


சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரைச் சேர்ந்த திமுக நிர்வாகி எஸ்.ஆர். நல்ல மருது மறைவையொட்டி அவரது இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற அழகிரி அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, புதிய கட்சி துவங்குவேனா என்பது போகப் போக தான் தெரியும். எதுவாக இருந்தாலும் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விரைவில் எனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்றார்.

மேலும், பாஜகவில் இணைவதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு வதந்திகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என அழகிரி கூறினார்.

திமுகவில் துரை தயாநிதிக்கு பதவி வழங்கப்படுகிறதா என்று கேட்டதற்கு, அழைத்துப் பேசட்டும் என்று அவர் பதிலளித்தார்.

மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது மு.க. அழகிரி அளித்த தொலைக்காட்சி பேட்டியால் திமுக கூட்டணி அமைவதில் பின்னடைவை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து திமுக தலைமை குறித்து அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து கட்சியில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார். இதன் பின்னர் மீண்டும் கட்சியில் அழகிரியை சேர்ப்பதற்கு அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாள்களாக அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அவர் அதை மறுத்து வந்தார்.

இந்நிலையில் வரும் பேரவைத் தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என அவர் கருத்து தெரிவித்துள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.