தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை: ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடனான சந்திப்பின்போது தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடனான சந்திப்பின்போது தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸுக்கான மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி உள்ளிட்டோர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை புதன்கிழமை சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு தினேஷ் குண்டுராவ் மற்றும் கே. எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:
"ராகுல் காந்தியின் தமிழக வருகையின்போது, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டணி கட்சித் தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டது. இதுதான் இந்த சந்திப்பின் நோக்கமாக இருந்தது.
தொகுதிப் பங்கீடு குறித்து இந்த சந்திப்பில் பேசப்படவில்லை.
ராகுல் காந்தியின் வருகை குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு கூடுதல் விவரங்கள் தெரிவிக்கப்படும்" என்றார் குண்டுராவ்.
தொடர்ந்து பேசிய கே. எஸ். அழகிரியும் இதே கருத்தை தமிழில் விளக்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...