பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உடல்நலம்தான் முக்கியம் என்று ரஜினியிடம் கூறினேன்: தமிழருவி மணியன்

நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், காந்திய மக்கள் இயக்கத் தலைவருமான தமிழருவி மணியன் சென்னை போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்தித்துப் பேசினார். 

News image
தமிழருவி மணியன்
Updated On :2 டிசம்பர் 2020, 8:08 am

DIN

நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், காந்திய மக்கள் இயக்கத் தலைவருமான தமிழருவி மணியன் சென்னை போயஸ் இல்லத்தில் இன்று ரஜினியை சந்தித்துப் பேசினார். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

'தமிழ்நாட்டு மக்களிடம் எதையும் மறைத்து வாழ வேண்டிய அவசியம் ரஜினிகாந்துக்கு எள்ளளவும் இல்லை. அவருடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அவர் இதுவரை என்ன நினைக்கிறாரோ அதை மக்களிடம் சொல்லி வருகிறார். அதுபோலவே அவரது உடல்நிலை குறித்தும் தெரிவிக்கிறார். 

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்குத் தான் தெரியும். அவரிடம் பேசியது குறித்து முழுமையாகக் கூற முடியாது. அவரிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. உங்கள் உடல்நலனுக்கு ஊறு விளைவிக்காத வகையில் முடிவெடுங்கள் என்று கூறினேன்' என்றார். 

முன்னதாக, திங்கள்கிழமை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி, அரசியல் பிரவேசம் குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.