விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

அமெரிக்க மக்களைக் கவர்ந்த ரசம்: அசத்திய ஜெயங்கொண்டம் சமையல் கலைஞர்

நியூ யார்க், நியூ ஜெர்ஸி, பிரின்ஸ்டன் ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியது தென்னிந்திய உணவான ரசம் தான் என்று சவால் விட்டுக் கொண்டிருந்தனர்.

News image

அமெரிக்க மக்களைக் கவர்ந்த ரசம்: அசத்திய ஜெயங்கொண்டம் சமையல் கலைஞர்

Updated On :3 டிசம்பர் 2020, 6:10 pm IST


அமெரிக்காவில் கரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட போது, ஏதோ மருத்துவத்தில் அதிசயம் நடந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், நியூ யார்க், நியூ ஜெர்ஸி, பிரின்ஸ்டன் ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியது தென்னிந்திய உணவான ரசம் தான் என்று சவால் விட்டுக் கொண்டிருந்தனர்.

அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் இந்த ரசம் இவ்வளவு புகழ்பெற்ற உணவாக மன்னிக்கவும் உணவே மருந்தாக மாற ஒருவர்தான் காரணம். அவர் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி என்ற பகுதியைச் சேர்ந்த சமையல் கலைஞர் அருண் ராஜதுரை.

அது எப்போதும் போல ஒரு சாதாரண நாள்தான், அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நாளில், 35 வயதான அருண் ராஜதுரைக்கு ஒரு யோசனை வந்தது. ரசம்.. இதில் சேர்க்கப்படும் மஞ்சள், பூண்டு, மிளகு என அனைத்து பொருள்களுமே நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக் கூடியதாக இருந்ததுதான் காரணம். எனவே, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ரசம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினார்.

அப்போது அமெரிக்காவில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மூன்று மருத்துவமனைகளுக்கு உணவளித்து வந்தார். அந்த உணவுடன் சேர்த்து இலவசமாக இந்த ரசத்தையும் இணைத்து அனுப்பினார். எந்த கட்டணமும் இல்லாமல்.

அதற்கு அவருக்குக் கிடைத்த வரவேற்பும் ஆதரவும் அளவில்லாதது. அதன்பிறகே ரசத்தின் தேவை அதிகரித்தது. அதற்கு ரசம் என்ற பெயர் மறைந்து, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் பானமாக புகழ்பெற்றது. அருண் பணியாற்றிய அஞ்சப்பர் பிரின்ஸ்டன் ஹோட்டலின் உணவுப் பட்டியலில் தவிர்க்கவே முடியாத உணவாக ரசம் மாறியது. அதிகம் விற்பனையாகும் உணவாகவும் மாறியது.

இதன் புகழ் பல நகரங்களுக்கும் பரவியதால், நியூ யார்க், நியூ ஜெர்ஸி மற்றும் கனடாவில் உள்ள கிளை உணவகங்களிலும் ரசம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 500 முதல் 600 கோப்பை ரசம் விற்பனையானது. நான் வீட்டில் இருந்து இதனை பரிசோதனை முறையில்தான் முயற்சித்தேன். ஆனால், இப்படி ஒரு சாதனையைப் படைக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. 

மீன்சுருட்டி பகுதியைச் சேர்ந்த அருண் ராஜதுரை, திருச்சியில் உள்ள கல்லூரியில் சமையல் தொடர்பான படிப்பை முடித்துவிட்டு சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு புகழ்பெற்ற உணவகத்தில் பணியாற்றி நியூ ஜெர்ஸி சென்றுள்ளார். இவர் ஏற்கனவே 2018-ஆம் ஆண்டில் தென் கிழக்கு ஆசியாவின் சிறந்த சமையல் நிபுணர் என்ற விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.