/

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.20 அடியை எட்டியது

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  102.20 அடியை எட்டியது. 

News image
மேட்டூர் அணை நீர்மட்டம் 102.20 அடியாக உயர்வு
Updated On :27 ஜனவரி 2024, 6:02 pm

DIN


மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம்  102.20 அடியை எட்டியது. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெள்ளிக்கிழமை காலை 102.20 கன அடியாக உள்ளது.  அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5957கன அடியிலிருந்து 6,116 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு வினாடிக்கு 700 கன அடியிலிருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 67.72 டி.எம்.சி. யாக இருந்தது. மேட்டூரில் 7.40 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.