தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 
மதுரைக்கிளை நீதிமன்றம்
மதுரைக்கிளை நீதிமன்றம்

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் 2019-இல் குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. நான் தோ்வில் பங்கேற்றேன். தமிழ் வழியில் கல்வி பயின்ற்கான ஒதுக்கீட்டில் தகுதி இருந்தும், எனக்கு சலுகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தமிழ் வழியில் கல்வி பயின்ற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலைக் கல்வியில் பயின்றவா்களுக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 
தொலை நிலைக் கல்வி பயின்றவா்களுக்கு தமிழ் வழியில் பயின்ற்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாகாது. ஆகவே தமிழ் வழியில் பயின்ற்கான இட ஒதுக்கீட்டில், தொலைநிலைக் கல்வி பயின்றவா்களுக்கும் இடமளிக்கும் குரூப் 1 தோ்வு நடைமுறைக்குத் தடை விதிக்க வேண்டும் என மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சோ்ந்த சக்தி ராவ் என்பவர் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். 
இவ்மனு உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், ஆங்கிலம் படிப்பவர்களுக்கு உலகம் முழுவதும் வாய்ப்பு உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 
2016-19 வரை குரூப்-1 தேர்வில் 20% தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தேர்வானவர்களின் விவரங்கள் என்ன? எனக் கேள்விய நீதிபதிகள் 20% தமிழ் வழி இடஒதுக்கீட்டில் தேர்வான 85 பேரின் சான்றிதழ்களை தாக்க செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் ஆளுநரின் செயலர், உள்துறை செயலர் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்து, அவர்கள் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com