47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாழப்பாடியில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரின் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
வாழப்பாடியில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
Updated On :6 டிசம்பர் 2020, 9:59 am

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

வாழப்பாடி வடக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் பெ.வேல்முருகன் தலைமையில், வாழப்பாடி பேருந்து நிலையம் மற்றும் மன்நாயக்கன்பட்டி  கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ராஜதுரை, ராமமூர்த்தி, வேல்முருகன், சத்திய குமார், சுரேஷ் இன்பத்தமிழன், வல்லரசு, சிவசக்தி, தவசி, மாயவன், கோபி, மூர்த்தி, அப்பு உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கரின் சமூக நீதி, சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, சட்ட விழிப்புணர்வு கொள்கைகளை பின்பற்ற உறுதி ஏற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.