திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை செலுத்திய பா.ஜ.க.வினர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வேல் யாத்திரைக்கான வேலை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை காலை காணிக்கையாக செலுத்தினார்.

News image
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை செலுத்திய பா.ஜ.க.வினர்
Updated On :27 ஜனவரி 2024, 6:03 pm

DIN

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வேல் யாத்திரைக்கான வேலை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை காலை காணிக்கையாக செலுத்தினார்.

பாஜக சாா்பில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்திற்கு எதிராக கடந்த நவம்பா் 6-ஆம் தேதி திருத்தணியில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை தொடங்கப்பட்டு முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் முக்கிய கோவில்களை கடந்து வந்தது. இதற்கான நிறைவு விழா (நாளை) திங்கள்கிழமை திருச்செந்தூரில் நடைபெறுகிறது. 

முன்னதாக யாத்திரைக்கு பூஜை செய்யப்பட்ட சுமார் 4 அடி ஐம்பொன் வேலினை யாத்திரை நிறைவின் ஒரு பகுதியாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கோவிலில் மூலவர் மற்றும் சண்முகரை வழிபட்டு கொடிமரத்துக்கு அருகில் உள்ள உண்டியலில் வேலை காணிக்கையாக செலுத்தினார். 

நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலர்கள் கரூ.நாகராஜன், நரேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் முரளி, மாவட்ட பொதுச்செயலர் சிவமுருகன் ஆதித்தன், மாவட்ட தலைவர் பால்ராஜ், மகளிரணி மாநில பொதுச் செயலாளர் நெல்லையம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.