ரூ.5 ஆயிரத்திற்கு ஆசைப்பட்டு போதைப் பாக்கு கடத்திய இருவர் கைது
ரூ.5 ஆயிரத்திற்கு ஆசைப்பட்டு போதைப் பாக்கு கடத்திய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


சேலம்: ரூ.5 ஆயிரத்திற்கு ஆசைப்பட்டு போதைப் பாக்கு கடத்திய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்துவதாக சேலம் சரக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் சரவணனுக்கு கிடைத்த தகவலின்பேரில் காவல் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு காவல் உதவி ஆய்வாளர் சக்தி, பர்கூர் காவல் ஆய்வாளர் முரளி தலைமையிலான குழு பர்கூர் பேருந்து நிறுத்தத்தில் போதைப் பாக்கு கடத்தி வந்த TN-52 B-3750 பதிவு எண் கொண்ட லாரியை சோதனை செய்தனர்.
பின்னர் வாகனத்தில் இருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் லாரியில் இருந்தவர்கள் இரண்டு பேரும் பர்கூரை அடுத்த கோட்டூர் கிராமத்தை சேர்ந்த வடிவேல்(40), வேல்முருகன் (30) என்பது தெரியவந்தது.
மேலும், லாரி, குஜராத்தில் இருந்து பூச்சி மருந்து பாரம் ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு பெங்களூர் வழியாக செல்லும்போது, பெங்களூர் நைஸ் ரோடு டோல் கேட்டில் வண்டியை நிறுத்திய மர்ம நபர் இங்கிருக்கும் பார்சல் பெட்டிகளை சென்னைக்கு எடுத்து சென்றால் ரூ.5,000 வாடகை தருவதாக கூறியதாக கூறப்படுகிறது.
ரூ. 5 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு இருவரும் பார்சல் பொருள்களை பெங்களூரில் இருந்து ஏற்றிக்கொண்டு சென்றபோது போலீசாரின் பிடியில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு லாரி ஓட்டுநர், அவரது உதவியாளர் இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...