/

காந்திக்குத்தான் நான் 'பி டீம்': கமல் 

தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம் என்று மக்கள் நீதி மய்யம் நிறுவனர், நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

News image
காந்திக்குத்தான் நான் 'பி டீம்': கமல்
Updated On :7 டிசம்பர் 2020, 9:49 am

DIN


தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம் என்று மக்கள் நீதி மய்யம் நிறுவனர், நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில், கமல் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், அவர் மீது உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர் தங்களது விமரிசனங்களை முன் வைத்திருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். 

ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.

அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. 

வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. 

திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா? என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.