கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதா மறைவுக்கு அதிமுக இரங்கல்

தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதா உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

News image
தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதா காலமானார்
Updated On :8 டிசம்பர் 2020, 7:27 am

DIN


சென்னை: தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர். ராதா உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி இணைந்து வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் அமைச்சரவையில் வீட்டு வசதித் துறை அமைச்சராகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றிய எஸ்.ஆர். ராதா உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்தோம்.

எஸ்.ஆர். ராதா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிராத்திக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.