தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிறந்தநாள் வாழ்த்து: பிரதமர், முதல்வருக்கு ரஜினி நன்றி

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 12:15 pm

DIN


பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் இன்று (சனிக்கிழமை) தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, ரஜினிகாந்துக்கு திரையுலகம் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மத்திய மற்றும் மாநில அரசியல் நண்பர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும், சக திரைக்கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சுட்டுரைப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.