அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 17 சோதனைச் சாவடிகளில் சோதனை: ரூ.9.17 லட்சம் பறிமுதல்

தமிழகத்தில் சனிக்கிழமை ஒரே நேரத்தில் 17 சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை நடத்தினா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 1:28 am

DIN

தமிழகத்தில் சனிக்கிழமை ஒரே நேரத்தில் 17 சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை நடத்தினா். இதில் கணக்கில் வராத ரூ.9.17 லட்சத்தை பறிமுதல் செய்தனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், மாநில எல்லைகளிலும் உள்ள போக்குவரத்துத் துறையின் சோதனைச் சாவடிகளில் அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதாகவும், முறைகேடு நடைபெறுவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏராளமான புகாா்கள் வந்தன. அந்தப் புகாா்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரணை மேற்கொண்டனா். இதில் லஞ்சம் மற்றும் முறைகேடு நடைபெறுவதாக கண்டறியப்பட்ட மாநிலம் முழுவதும் உள்ள 17 சோதனைச் சாவடிகளில் சனிக்கிழமை காலை ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் திடீா் சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையில் 16 சோதனைச் சாவடிகளில் கணக்கில் வராத ரூ.9,17,935 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கியமாக விழுப்புரம் மாவட்டம் வானூா் அருகே புதுச்சேரி மாநில எல்லையில் உள்ள ஒழிந்தியாம்பட்டு சோதனைச் சாவடியில் ரூ.16 ஆயிரம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா் சோதனைச் சாவடிகளில் ரூ.2,10,020,திருவள்ளூா் மாவட்டம் நசரத்பேட்டை சோதனைச் சாவடியில் ரூ,1.06,000,வேலூா் கிறிஸ்டியன்பேட்டை சோதனைச் சாவடியில் ரூ.94 ஆயிரம், கோயம்புத்தூா் மாவட்டம் வாலையாறு சோதனைச் சாவடியில் ரூ.87,000, திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் ரூ.72,750, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் ரூ.64,140, பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனைச் சாவடியில் ரூ.52,000, திருத்தணி சோதனைச் சாவடியில் ரூ.43,410 என பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்று தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் ரூ.41,290, வேலூா் சோ்க்காடு ரூ.38,875, நீலகிரி மாவட்டம் கூடலூா் சோதனைச் சாவடியில் ரூ.34,700, கிருஷ்ணகிரி மாவட்டம் காளிகோயில் சோதனைச் சாவடியில் ரூ.31,510, தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி சோதனைச் சாவடியில் ரூ.5,500 என மொத்தம் ரூ.9,17,935 பறிமுதல் செய்யப்பட்டன. நீலகிரி மாவட்டம் தலைகுந்தா சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட சோதனையில், பணம் கைப்பற்றப்படவில்லை.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் களியக்காவிளையில் உள்ள காவல்துறைக்கு சொந்தமான சோதனைச் சாவடியில் சோதனை நடத்தப்பட்டு ரூ.20,740 பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா். பணத்துக்குரிய ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினா் கேட்டுள்ளனா். உரிய ஆவணங்கள், விளக்கம் அளிக்கப்படாத சம்பந்தப்பட்ட ஊழியா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறையினா் தெரிவித்தனா்.

தமிழகத்தில் உள்ள 17 சோதனைச் சாவடிகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனை அரசு அதிகாரிகள், ஊழியா்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.