காஞ்சிபுரம்: கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தாதாச்சாரியார் சாற்றுமுறை திருநாளை முன்னிட்டு உற்சவர் தேவராஜ சுவாமி முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயிலுக்கு சுவாமி தரினசனம் செய்ய வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
'உலகின் பிடியிலிருந்து கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் என்பது முழுவதுமாக விலகிட வேண்டும் என்றும், விரைவில் தடுப்பூசியின் பயன்பாடு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாளிடம் வேண்டிக் கொண்டேன்.
கரோனாவின் மூலம் இறைவன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நம்மை எச்சரித்திருக்கிறார். இறை வழிபாடு அவசியம். அதேநேரத்தில் நாம் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதும் அவசியமாகும்.
கரோனா நோய்த்தொற்றின் தாக்க தொடக்க காலத்தில் வெளிநாடுகளிலிருந்து முகக்கவசங்களை நாம் இறக்குமதி செய்தோம். ஆனால் இன்று தினசரி சுமார் 3 லட்சம் முகக்கவசங்களை நாம் தயாரிக்கிறோம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதியாகிறது. பல நாடுகள் தடுப்பூசியை தயாரிப்பதிலும், விற்பனை செய்வதிலும் மிகுந்த ஆர்வமாக உள்ளன. ஆனால் இந்தியாவோ எல்லாவற்றுக்கும் தலைமை தாங்கும் வகையில் இருந்து வருகிறது. தடுப்பூசியை தேவையான எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் சக்தி இந்தியாவில் மட்டுமே உள்ளது என ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் தெரிவித்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாகும்.
பிரதமர் மோடி மூன்று தடுப்பூசி நிறுவனங்களுக்குச் சென்று அவற்றை ஊக்கப்படுத்தியிருக்கிறார். கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. தடுப்பூசியை கண்டறிவது மிக முக்கியம் என்றாலும் பாதுகாப்பு மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் பற்றிய அனைத்து விபரங்களையும் நாம் தெரிந்து வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்' எனத் தெரிவித்தார்.
பேட்டியின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.சாமுண்டீஸ்வரி, பாஜக காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் பாபு, துணைத் தலைவர்கள் ஓம்.சக்தி பெருமாள், வாசன், நகர் தலைவர் அதிசயம், குமார் உட்பட பலரும் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


