

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் 2 ஆவது நாளாகக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 61 விவசாயிகளைக் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கடந்த திங்கள்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:
தில்லியில் அகிம்சையான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எதிரான செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும். 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெறும் வரையில் எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.
இதையடுத்து, காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற 61 பேரை கைது செய்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.