தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மன்னார்குடியில் அ.ம.மு.க.வினர் கொண்டாட்டம்

மன்னார்குடியில், செவ்வாய்க்கிழமை அமமுகவினர் ஊர்வலமாக வந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

News image
மன்னார்குடியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அமமுகவினர்
Updated On :15 டிசம்பர் 2020, 12:03 pm

DIN

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அமமுகவிற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு குக்கர் சின்னம் வழங்கி அறிவிப்பு செய்திருப்பதை வரவேற்று, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், செவ்வாய்க்கிழமை அமமுகவினர் ஊர்வலமாக வந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மன்னார்குடி அன்னவாசல் தெருவில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து, அமமுக மாவட்டச் செயலர் எஸ்.காமராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட கட்சியினர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பட்டாசு வெடித்தப்படியும், சசிகலா, டி.டி.வி.தினகரனை வாழ்த்தி முழக்கமிட்டப்படி , மேல ராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகே வந்தனர். பின்னர், பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும், பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கும், அமமுகவிற்கு குக்கர் சின்னம் கிடைத்திருப்பதைத் தெரியப்படுத்தி  இனிப்பு வழங்கி தங்களின் மகிழ்ச்சி பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் மாவட்டச் செயலர் எஸ்.காமராஜ் செய்தியாளர்களிடம் பேசியபோது. 

தமிழகத்தில் , கருணாநிதி , ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இன்று தலைவர்கள் இல்லாது பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி அதிமுகவையும் , ஆட்சியையும் மத்திய அரசிடம் அடகுவைத்து விட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனித்துச் செயல்பட முடியாத நிலைக்கு ஏற்பட்டு பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட முடியாத சுழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். 

அமமுகவிற்கு குக்கர் சின்னம் கிடைத்திருப்பதன் மூலம், சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில்  அதிமுகவை திக்குமுக்கு ஆடாவைக்கப்பட்டது. திமுக வைப்புத் தொகையை இழக்க வைத்து, குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி. பல ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வர இருக்கின்ற தமிழக, புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமமுக வேட்பாளர்கள் அனைவரும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி சரித்திர சாதனைப் படைப்பார்கள். விரைவில், விடுதலை ஆகி நம்முடன் இணைந்து கட்சிப் பணியாற்றுவார் சசிகலா.

சசிகலா, தினகரன் தலைமை ஏற்க லட்சக்கணக்கானவர்கள் தயார் நிலையில் அணிவகுத்து உள்ளனர். தமிழகத்தில் அமமுக ஆட்சி அமைவது உறுதி என்றார். நிகழ்ச்சியில், மன்னார்குடி நகரச் செயலர் ஏ ஆர் ஆனந்த ராஜ், ஒன்றிய செயலர்கள் க.அசோகன் (மன்னார்குடி), எம்.எஸ். சங்கர் (நீ டாமங்கலம்), வி.கே. அண்ணாதுரை (கோட்டூர்) மற்றும் கட்சி, சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.