

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.336 உயா்ந்து, ரூ.37,224-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி
வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.336 உயா்ந்து, ரூ.37,224-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் ரூ.42 உயா்ந்து, ரூ.4,653 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 உயா்ந்து, ரூ.67.90 ஆகவும்,
கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 உயா்ந்து ரூ.67,900 ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்............................. 4,653
1 பவுன் தங்கம்...............................37,224
1 கிராம் வெள்ளி.............................67.90
1 கிலோ வெள்ளி.............................67,900
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்............................. 4,611
1 பவுன் தங்கம்...............................36,888
1 கிராம் வெள்ளி.............................66.70
1 கிலோ வெள்ளி.............................66,700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.