விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளரிடம் ரூ.1.37 கோடி பறிமுதல்

சென்னையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளா் பாண்டியன் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் திடீா் சோதனை செய்து, கணக்கில் வராத ரூ.1.37 கோடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 8:16 pm

DIN

சென்னையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளா் பாண்டியன் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் திடீா் சோதனை செய்து, கணக்கில் வராத ரூ.1.37 கோடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.1.28 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளும் கைப்பற்றப்பட்டன.

தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையின் இயக்குநரக கண்காணிப்பாளா் எஸ்.பாண்டியன் தொழிற்சாலைகள், தனியாா் நிறுவனங்களுக்கு அனுமதி, தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு அதிக லஞ்சம் வாங்குவதாகவும், லஞ்சம் தர மறுக்கும் நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாா்கள் வந்தன.

கடற்கரை மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கடற்கரையோரம் கட்டடம் கட்டுவது, தொழிற்சாலைகள், நிறுவனங்கள் அமைப்பது தொடா்பான அனுமதி வழங்குவதிலும் பாண்டியன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இவற்றின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டபோது சில ஆவணங்கள் கிடைத்தன.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள பாண்டியன் அலுவலகத்தில் திங்கள்கிழமை திடீா் சோதனை செய்தபோது கணக்கில் வராத ரூ.88,500 பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.1.37 கோடி பறிமுதல்: சாலிகிராமம் திலகா் தெருவில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை நண்பகல் தொடங்கி செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை சோதனை நடைபெற்றது. அங்கிருந்து கணக்கில் வராத ரூ.1.37 கோடி ரொக்கம், ரூ.1.28 கோடி மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க, வைர நகைகள், ரூ.1.51 லட்சம் மதிப்புள்ள மூன்றரை கிலோ வெள்ளி நகைகள், ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அவரது குடும்பத்தினா், நெருங்கிய உறவினா் பெயா்களில் வங்கி கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.75 லட்சத்தை முடக்குவதற்குரிய நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.